கோட்டைப்பட்டினத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு..!

கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.

மாநிலத் துணைச் செயலாளர் கோட்டை ஹாரிஸ் அனைவரையும் வரவேற்றார்.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் செப்டம்பர் 10 தேதி சென்னை தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் ஏன் என்பது பற்றியும் அதற்கான ஆயத்த பணிகள் பற்றியும் விளக்க உரையாற்றினார்.

கிளைகளின் முன்னேற்பாடுகள் குறித்து மாநில துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் நெறிஉரையாற்றினார். 

ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக செப் 10 அன்று சென்னையில் மஜக நடத்தும்  தலைமைச் செயலக முற்றுகைக்கு போராட்டத்திற்கு புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்  முழுவதுமிலிருந்து 300 பேரை திரட்டுவது என்றும், முதல் கட்டமாக 15 வேன்களை முன்பதிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கிளை சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு,சுவர் விளம்பரங்கள், ஆட்டோ விளம்பரங்கள், நன்கொடை சேகரிப்பு ஆகியவற்றுக்காக போராட்ட ஆயத்த குழு அமைக்கப்பட்டது.

இச்செயற்குழுவை முன்னிட்டு கோட்டைப்பட்டினம் எங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

மாநில துணை செயலாளர் பேரை அப்துல் சலாம், மாநில விவசாய அணியின் துணைச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் , மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி ஆகிய மாநில நிர்வாகிகள்,

மாவட்ட துணை செயலாளர் ஒளி முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாசின், ஒன்றிய பொறுப்பாளர் ஜுபைர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் மாவட்ட துணை செயலாளர் அரசை செய்யது அபுதாஹிர் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJKitWING 
#மஜகபுதுக்கோட்டைகிழக்கு_மாவட்டம்
05.08.22

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments