என்.எம்.ஆர். அட்டையில் ஊராட்சி தலைவர் கையெழுத்திட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கோரிக்கை
    ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியை சேர்ந்த குறிச்சி வயல், கூடலூர் கிராமத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை திட்டத்தில்) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரக்கடைசியில் என்.எம்.ஆர். அட்டையில் ஊராட்சி தலைவர் கையெழுத்திடுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஒருவாரமாகியும்நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெஷ்மி அவர்கள்  கையெழுத்து போடவில்லை என்று கூறி 100 நாள் திட்ட ஊழியர்கள் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து ஒன்றியக்குழுத்தலைவர் உமாதேவியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments