கேரளாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தமிழகத்தை சேர்ந்த தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழிலாளியான அல்லாபிச்சையை கேரளா மக்கள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருகிறது.
கேரளா மாநிலம் கல்லாறு ஜம்ஷானியில் தங்கி புத்தூர் நகர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அல்லாபிச்சை. இவர் வேர்க்கடலையை மடித்து கொடுப்பதற்காக பழைய புத்தகங்கள் மற்றும் வார இதழ்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் எஸ்.என்.புரம் ஏ.ஆர்.பவனில் வசித்து வரும் சசிகுமாரிடம் வேர்க்கடலை விற்பனைக்காக ஏற்ற பழைய புத்தகங்கள் மற்றும் வார இதழ்களை வாங்கியுள்ளார்.
கல்லாறு ஜம்ஷானியில் உள்ள வாடகை வீட்டை அடைந்த அல்லாபிச்சை புத்தகத்தை திறந்து பார்த்தபோது, புத்தகம் ஒன்றில் பணம் ரூபாய்.4 ஆயிரம் இருந்தது. உடனே சசிகுமாரை தேடிச்சென்று பணத்தை கொடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சசிக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சுமார் ஒன்றரை வருடங்கள் தேடலுக்கு பின் சசிகுமார்ரை கண்டு பணத்தை திருப்பி அளித்தார். பழைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த ரூபாய்.4 ஆயிரம் பணத்தை அல்லாப்பிச்சை குடும்பத்தாரிடம் திருப்பிக் கொடுத்தது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கேரளா ஊடகங்களில் கோட்டைபட்டினத்தை சேர்ந்த தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் அல்லாப்பிச்சைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.