புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 297 மனுக்கள் பெறப்பட்டன




புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தில் வாழும் நரிக்குறவர்கள் வீட்டு மனை பட்டா கோரி மனு கொடுப்பதற்காக வந்தனர்.
        அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்தினுள் போலீசார் அனுமதித்தனர். மற்றவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நுழைவுவாயிலில் அமர்ந்திருந்தனர். தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வந்த தொழிற்சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் அவர்கள் வலியுறுத்தினர். தமிழை வளர்த்த கம்பனுக்கு புதுக்கோட்டையில் சிலை வைக்க கோரி பா.ஜ.க. நிர்வாகிகள் மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments