புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு




    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் வழக்கமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வார். அதன்பின் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு நற்சான்றிதழ்களை வழங்கிய பின் விழா முடிவடையும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

கலை நிகழ்ச்சிகள்

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் சுதந்திர தின விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் மற்றும் பணிகள் அதிகாரிகள் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளோடு சுதந்திர தின விழாவை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments