சுவிதா தளத்தில் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றம் செய்யும் நடைமுறை ரத்தாகிறது




வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர், அவ்வாறு வருவதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி சான்றிதழையோ, கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) ‘நெகட்டிவ்’ சான்றிதழையோ ஏர் சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த தளம் அவ்வப்போது செயலிழந்து போகிறது, படிவங்களை அணுகுவதில் சிரமம் ஏற்படுகிறது, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது கடினமாக இருக்கிறது என பயணிகள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இப்போது இந்த நடைமுறையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே நேரத்தில், ஆன்லைனில் வெளிநாட்டு பயணிகள் சுய தகவல்களை அறிவிக்கும் கட்டாய நடைமுறை தொடரும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments