புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக மோதுவது போல வந்ததால் 3 பஸ்களை பொது மக்கள் சிறைபிடித்தனர்
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ,பேராவூரணி பகுதிகளுக்கு 2 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் ஆகியவை புறப்பட்டன. இந்த மூன்று பஸ்களும் ஆலங்குடி வம்பன் பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் களின் டிரைவர்களுக்கு இடையே யார்? முந்தி செல்வது என்பதில் போட்டோ போட்டு ஏற்பட்டது.

உச்சகட்டமாக ஆலங்குடி சந்தைப்பேட்டை பஸ் திருத்தம் அருகே தனியார் பஸ் ,அரசு பஸ்சை உரசுவது போன்று நெருக்கமாக முந்தி சென்றது.

இதைக் கண்டு பஸ்ஸில் இருந்த பயணிகளும் சாலையோரம் பஸ்களுக்கு காத்து நின்ற பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே ஆலங்குடி சந்தை பகுதியில் பஸ்ஸுக்கு காத்திருந்த பொதுமக்கள் மீது அந்த பஸ்கள் மோதுவது போல வேகமாக வந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் பொதுமக்கள் துணிச்சலுடன் முந்தி சொல்வதில் போட்டா போட்டி நடத்தி மக்களை அலறவிட்ட மூன்று பஸ்களையும் நடுரோட்டில் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் டிரைவர்களுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து போலீசார் டிரைவர்களை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை ஆலங்குடி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. முந்தி செல்வதற்கு போட்டா போட்டி நடத்திய பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments