புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பூங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி, செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், உணவுபொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழுசுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம், ஜல்சக்தி இயக்கம் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கே.ஆர்.காலனியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் துரைக்குமரன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் பள்ளி அருகே உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கக்கோரி மனு கொடுத்தனர். மேலும் பள்ளி வளர்ச்சிக்காக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 ஊராட்சிகள், திருமயம் ஊராட்சி, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள், கீரமங்கலம் சேந்தன்குடி உள்ளிட்ட ஊராட்சியில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments