இது இந்தியாவிற்கே பெருமையாச்சே... பெங்களூர்-துபாய் பயணத்திற்கு உலகின் மிக பெரும் விமானம்!! ஏர்பஸ் ஏ380...
பயணிகளுடன் பறக்கும் உலகின் மிக பெரும் விமானம் விரைவில் இந்தியாவில் தனது சேவையை 2வது வழித்தடத்தில் துவங்கவுள்ளது. எந்த நிறுவனத்துடைய விமானம் அது? சேவை எப்போது துவங்கப்படுகிறது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். புவியீர்ப்பு விசையை மீறி, பல ஆயிரங்கள் அடி உயரத்தில் பறக்கும் விமானங்கள் எப்போதுமே நமக்கு ஒருவித சுவாரஸ்யத்தை தரக்கூடியவை. அதிலிலும் பயணிகளை அதிகம் ஏற்றி செல்லக்கூடிய, அளவில் பெரிய விமானங்களை பற்றி சொல்லவே வேண்டாம். எவரொவரும் வாயை பிளந்துக்கொண்டுதான் பார்ப்பர்

அத்தகைய அளவில்-பெரிய விமானங்களுள் ஒன்றுதான், ஏர்பஸ் ஏ380. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இதுதான் உலகின் மிக பெரும் பயணிகள் விமானமாகும். தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் நிறுவனத்திற்காக இயங்கிவரும் ஏ380 ஆனது விமான பொறியியல் உலகின் பிரம்மாண்ட படைப்பு ஆகும்.

 ஏர்பஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விமானத்தில் சாதாரண பயணிகளில் இருந்து பிஸ்னஸ் கிளாஸில் பயணிப்போர்க்கு தேவையான லக்சரி அம்சங்கள் வரையில் அனைத்தும் உள்ளன. இத்தகைய விமானம் தான் விரைவில் துபாய்-பெங்களூர் வழித்தட போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அவ்வப்போது விமானத்தில் பயணிப்போரின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏர்பஸ் ஏ380 விமானம் துபாய் - பெங்களூர் இடையே தனது பயணத்தை வருகிற 2022 அக்டோபர் 30ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்சமயம் துபாய்-பெங்களூர் வழித்தட பயணத்திற்கு போயிங் 777 விமானத்தை பயன்படுத்தி வருகிறது. 
அகலமான உடலமைப்பை கொண்ட விமானமாக விளங்கும் ஏர்பஸ் ஏ380 -இன் எடை 510 டன்களில் இருந்து 575 டன்கள் வரையில் ஆகும். நீளம் ஆனது 72.7 மீட்டர்கள். இதன் நீளத்தில் இரு நீல திமிங்கலங்களை அடக்கிவிடலாம். அதேபோல் உயரமும் 5 ஒட்டகசிவிங்கிகளின் உயரத்திற்கு இணையாக 24.1 மீட்டர்களாக உள்ளது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட இந்த விமானத்தில் மொத்தம் ஏறக்குறைய 40 இலட்ச பாகங்கள் அடங்கியுள்ளன. தற்போதைய போயிங் 777 விமானத்துடன் ஒப்பிடுகையில் ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 45% கூடுதல் இருக்கை வசதிகள் உள்ளன.


 இந்த விமானத்தில் ஒவ்வொரு கேபினில் உள்ள இருக்கைகளிலும் அளவில் பெரிய பொழுப்போக்கு திரைகள் உள்ளன. எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனத்திடம் மொத்தம் 118 ஏ380 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை மொத்தமாக 1 பில்லியன் கிமீ-க்கும் அதிகமான தொலைவை, சுமார் 10 கோடிக்கும் அதிகமான பயணிகளுடன் கடந்த 2018இல் இருந்து பயணித்துள்ளன. எமிரேட்ஸ் ஏர்லைனில் உள்ள ஏர்பஸ் ஏ380 விமானங்களில் குறுகிய தொலைவு பறக்கும் விமானம் என்று பார்த்தால், துபாய்- ஜெட்டா நகரங்களுக்கு இடையே இயங்கி வரும் ஏ380 விமானத்தை சொல்லலாம். 

ஏனெனில் துபாய் - சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரங்களுக்கு இடையேயான தூரம் 1,700கிமீ மட்டுமே ஆகும். அதுவே நீண்ட தொலைவாக, துபாயில் இருந்து நியூசிலாந்தின் அக்லாந்து நகரத்திற்கு இடையே சுமார் 14,193கிமீ தொலைவிற்கு ஏ380 விமானம் ஒன்று இயங்கி வருகிறது.இவ்வாறு உலகம் முழுவதிலும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் ஏ380 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில், மும்பைக்கு அடுத்து ஏ380 விமான சேவையை பெறும் 2வது நகரம் பெங்களூர் ஆகும். துபாய்-பெங்களூர் இடையே ஏ380-இன் விமான சேவை வருகிற அக்டோபர் 30ஆம் தேதி துவங்கவுள்ளது என்றாலும், பெங்களூர் மண்ணை ஏ380 விமானம் அக்டோபர் 31ஆம் தேதிதான் வந்தடையுமாம். 

ஏனெனில் இந்த வழித்தடத்தில் ஏ380 விமானத்தின் முதல் பயணம் ஆனது அக்டோபர் 30ஆம் தேதி இரவு 9.25 மணிக்கு துபாயில் துவங்குகிறது. இந்த முதல் பயணம் மறுநாள் (அக்டோபர் 31) நள்ளிரவு 2.30 மணியளவில் பெங்களூருவில் நிறைவடையும். அதன்பின் அன்று மாலை 4.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து ஏ380 விமானம் துபாய்க்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு போயிங் 777 விமானம் தற்சமயம் பார்த்துக்கொண்டுவரும் சேவையை அக்டோபர் 30ஆம் தேதி முதல் ஏ380 கவனிக்கவுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments