மீமிசல் அருகே அரசு பஸ் மீது சரக்கு வேன் உரசியதில் 2 பேர் படுகாயம்
        தேவகோட்டையில் இருந்து மீமிசலுக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. ஆலத்தூர் அருகே வந்த போது எதிரே மீமிசலிருந்து வந்த சரக்கு வேன், அரசு பஸ்சின் ஓரத்தில் உரசியது. அப்போது பஸ் ஜன்னல் ஓரத்தில் கை வைத்திருந்த குமுலூர் கிராமத்தை சேர்ந்த வைரவசுந்தரம் (வயது 47) மற்றும் கலபம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (60) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சரக்கு வேனை ஓட்டி வந்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஐசக் ஜெயசீலன் (37) என்பவர் மீது மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments