அதிராம்பட்டினத்தில்செப் 10 முற்றுகை ஆலோசனை_கூட்டம்..500க்கும்மேற்பட்டோரை திரட்ட தீர்மானம்!!
அதிராம்பட்டினத்தில் செப்10முற்றுகைஆலோசனைகூட்டம்..

500_க்கும்மேற்பட்டோரைதிரட்ட_தீர்மானம்!!

ஆகஸ்ட்: 24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம்  நகர ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் அதிரை B.மர்ஜிக் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் கட்சியின் மாவட்ட செயலாளரும்  அதிரை சேக், போராட்டக்குழு துணை தலைவருமான JS. சாகுல் ஹமீது ( வாஹித் ) மாவட்ட IT WING செயலாளர், அவர்கள் பங்கேற்று வருகின்ற செப்டம்பர் 10 சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை தொடர்பாக நகர நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் பிரச்சார பணிகளை முன்னெடுப்பது குறித்தும், போராட்டத்திற்கு அதிகப்படியான மக்களை திரட்டுவது குறித்தும் நிர்வாகிகளிடத்தில் கலந்தாய்வு நடத்தினார்.

முற்றுகைப் போராட்டத்திற்கு அதிராம்பட்டினம் நகர  பகுதியில் 500க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்  மாவட்டத் துணை செயலாளர்கள் பைசல் , மற்றும், நகர துணை செயலாளர் பாசித், பசீர், தொழிற்சங்க செயலாளர் ஆரிப், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments