மதுரை-தொண்டி இடையே விரைவு பேருந்து இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை




    தொண்டியிலிருந்து மதுரை செல்ல சுமார் 3 அரை மணி நேரம் ஆகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதனால் தொண்டியிலிருந்து மதுரைக்கு இடைநில்லா பேருந்துகள் இயக்க வேண்டும் எ ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் இருந்து மதுரைக்கு தினமும் அலுவலக பணிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் செல்கின்றனர். தொண்டியிலிருந்து புறப்படும் பஸ் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தை மூன்றரை மணிநேரம் கழிந்தே சென்றடைகிறது. 40க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் உள்ளதால் அனைத்திலும் நின்று செல்வதாலும் காலதாமதம் ஆகிறது.

நீண்ட நேரம் பிரயாணம் செய்வதால் பயணிகளுக்கு சிரமும், அலுவலகம் செல்வோருக்கு அவதியும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே அரசு பேருந்து செல்ல வேண்டும் என்பதாலும் கால விரயம் ஏற்படுகிறது. அதனால் தொண்டியிலிருந்து மதுரைக்கு இடை நில்லா பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொண்டியை சேர்ந்த ஆனந்தன் கூறுகையில், தொண்டி பகுதி மக்கள் வணிகம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் மதுரையையே நாடி உள்ளனர்.

தொண்டியிலிருந்து மதுரைக்கு ஒன்றிரண்டு தனியார் பேருந்துகளே உள்ளன. அதிகமாக அரசு பேருந்தே இயக்கப்படுகிறது. அனைத்து அரசுப் பேருந்தும் அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்கிறது. மூன்றரை மணி நேரம் செல்கின்றனர். குற்றாலத்திற்கு சென்ற பஸ்சும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைநில்லா பேருந்து இயக்க வேண்டும். அல்லது திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை ஆகிய இடங்களில் மட்டும் நிறுத்தி செல்லும் 1.2.3 பேருந்தை இயக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments