மக்கள் குறைதீா் கூட்டம்:6 பேருக்கு நகரும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கல்புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய நகரும் காய்கனி விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா்.
தலா ரூ. 15 ஆயிரம் மானியம், ரூ. 15 ஆயிரம் பயனாளியின் பங்குத் தொகை என்ற அடிப்படையில் 6 பேருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மக்கள் குறைகேட்பு: ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 295 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா். கூட்டத்தின்போது, ஒருவருக்கு ரூ. 8,500 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் அவா் வழங்கினாா். இதில், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments