பெங்களூர் - புதுக்கோட்டை பயணத்திற்கு SSS ஹூப்ளி ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்குக்காக



 


இது குறித்து புதுக்கோட்டை ரயில் யூசர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

வரும் வாரங்களில் சனி கிழமை மதியம் பெங்களூருவிலிருந்து(யெஷ்வந்த்பூர், பனஸ்வாடி) புறப்பட்டு  புதுக்கோட்டை வருவதற்கு 07355/ஹூப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் டிக்கெட் அதிக காத்திருப்புபட்டியலுக்கு சென்று விட்டன. யெஷ்வந்த்பூரிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கு இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தால் உறுதியாகுமா? என்றும் சிலர் கேட்டுவருகின்றனர்.

ஹப்ளி-ராமேஸ்வரம் ரயிலில் மூன்று முறையில் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. 

ஹூப்ளி-ராமேஸ்வரம், 
ஹூப்ளி-யெஷ்வந்த்பூர், யெஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் 

என்று தனி தனியே quota முறையில் டிக்கெட்கள்  ஒதுக்கப்பட்டிருக்கும்.  ராமேஸ்வரம்-புதுக்கோட்டை-திருச்சி ரயில் வழித்தடத்திற்கு பெங்களூரு/ஓசூர் செல்ல இது மட்டுமே ஒரே நேரடி ரயில் என்பதால் பெங்களூருவிலிருந்து அதாவது யெஷ்வந்த்பூர் & பனஸ்வாடி ரயில் நிலையகளிலிருந்து அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது. இதற்கு அடுத்தபடியாக படியாக டிக்கெட் முன்பதிவில்  ஓசூர் & தருமபுரி ரயில் நிலையங்கள் உள்ளன. ஆகையால் வரும் வாரங்களில் சனி கிழமை அன்று யெஷ்வந்த்பூர்(பெங்களூரு)-புதுக்கோட்டை இடையே டிக்கெட் முன்பதிவு படுக்கை வசதி, 3 & 2 அடுக்கு AC பெட்டிகள் என அனைத்தும் டிக்கெட்களும் Waiting இல் சென்றுவிட்டன. எனவே காத்திருப்பு பெட்டியில் 80 க்குமேல் என்று சென்றுகொண்டிருக்கும் வேளையில் உங்களது டிக்கெட் உறுதிப்படுத்திக்கொள்ள கீழ்கண்ட முறையில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

"யெஷ்வந்த்பூர்(பெங்களுரு), பனஸ்வாடி(பெங்களுரு) போன்ற பகுதிகளிலிருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு புதுக்கோட்டை வர நினைப்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது துமகூரு(Tumakuru)-புதுக்கோட்டை என டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டு Boarding point(ஏறும் இடம்) யெஷ்வந்த்பூர் அல்லது பனஸ்வாடி என்று இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட்கள் உறுதியாகிவிடும். 

ஏனெனில் துமகூரு ரயில் நிலையத்திற்க்கான Quota முறை வேறு என்பதால் வரும் வாரங்களில் 07355/ஹூப்ளி-ராமேஸ்வரம் ரயிலில்  துமகூரு-புதுக்கோட்டை இடையே டிக்கெட்கள் இருப்பு உள்ளது. இவ்வாறு யெஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திக்கிற்கு முன்புள்ள துமகூரு ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணவேறுபாடு ₹15/- மட்டுமே". 

குறிப்பு: அதே நேரத்தில் வரும்வாரங்களில் ஞாயிறு இரவுகளில் புதுக்கோட்டையிலிருந்து யெஷ்வந்த்பூர்(பெங்களூரு), பனஸ்வாடி(பெங்களூரு), ஓசூர், தருமபுரி செல்ல 07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலில் டிக்கெட் இருப்பு உள்ளது, பயன்படுத்திக்கொள்ளவும்.

புதுக்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு (பனஸ்வாடி யஷ்வந்த்பூர்) ரயில் நிலையங்களுக்கு செல்லும் போது  டிக்கெட் கிடைக்கவில்லை என்றால்.‌ புதுக்கோட்டை - துமகூரு டிக்கெட் இருந்தால்  அதில் புக்கிங் செய்து கொள்ளுங்கள். பனஸ்வாடி யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கி கொள்ளலாம்.

நன்றி : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments