ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்றதை நாடு முழுவதும் (மார்ச்-13 -2021 முதல் 15-08-2022 வரை) 75 வாரங்களுக்கு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா விழாவாக கொண்டாட வேண்டும் என்று விடுத்ததையடுத்து அதை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்டு 13 முதல் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவவும் மேதகு பாரதப் பிரதமர் அவர்கள் வேண்டுகோள் வைத்தார்கள். 
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவும் 76-வது சுதந்திர தின விழாவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நிழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத்திற்காக உழைத்த உத்தமர்களை நினைவு கூர்ந்து தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, உறுப்பினர் கண்ணையா கலந்துகொண்டனர். 
சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியர் பற்றி மாணவி ஆர்த்தி மிகவும் எழுச்சிமிகு உரையையும், வந்தேமாதரம் பாடலை மாணவி கல்பனாவும் பாடி சிறப்பித்தனர். அவர்களுக்கு வேலுநாச்சியார் முகமூடியும் பரிசுகளும் வழங்கி கொளரவம் செய்யப்பட்டது. இந்நிழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும்,மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களில் சிலர் தேசத் தலைவர்களின் முகமூடியை அணிந்து தேசப்பற்றை பறைசாற்றிய விதம் அனைவரையும் மகிழ்வித்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments