செகந்திராபாத்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கண்டனூர் புதுவயல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை






செகந்திராபாத்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கண்டனூர் புதுவயல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-





தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேசுவரம் சென்றடைகிறது.

 அதேபோல் மறு மார்க்கத்தில் காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர், சென்னை வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது.

 இந்த ரயில் கண்டனூர் புதுவயல் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் சுற்றியுள்ள 128 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கும், அரிசி உற்பத்தியில் தமிழகத்தின் 2-வது நகரமான புதுவயல் பகுதியில் உள்ள நெல், அரிசி வியாபாரிகள் வியாபார வேலையாக சென்று வரவும் உதவியாக இருக்கும்.

எனவே இந்த ரயிலை கண்டனூர் புதுவயல் ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல ஏற்பாடு செய்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு தென்னக ெரயில்வே பொது மேலாளர், இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments