மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி



மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 குறு வளமையங்களில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மற்றும் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் விளைவுகள் உள்ளன. அந்த கற்றல் விளைவுகளை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களிடத்தில் அனைத்துக் கற்றல் விளைவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

பயிற்சியில் கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments