அறந்தாங்கி வழியாக சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை





சென்னையில் இருந்து திருவாரூர். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ உதயம்சண்முகம் எம்.பிக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




திருவாரூர்-காரைக்குடி தடம் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது சென்னை தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவா ரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக் குடிவழியாக ராமேஸ்வரத்திற்கு கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வந்தன.

திருவாரூர் - காரைக் குடி இடையே அகலர யில்பாதை அமைக்கும் பணிக்காக இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர்- காரைக்குடி அகலரயில் பாதை பணிகள் நிறைவ டைந்தபிறகு தற்போது மயிலாடுதுறை -காரைக்குடி எக்ஸ்பிரஸ், எர்ணா குளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்கள் (இம்மாத இறுதியில் செகந் திராபாத்-ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படஉள்ளது)இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் அறந் தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதி ராம்பட்டினம், முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களை பயன்படுத்தக் கூடிய நூற்றுக்கணக்கான கிராமங்கள், நகரங்களை சேர்ந்த பயணிகள் சென்னை சென்று வர காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் ரயில்கள் இல்லை. இதனால் அறந்தாங்கி, பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இந்தநிலையில் திரு வாரூர் - காரைக்குடி தடம் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது சென்னை தாம்பரத்தில் இருந்து அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை அறந்தாங்கி மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான உதயம் சண்முகம், தஞ்சாவூர் எம். பி பழனிமாணிக்கம், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ உதயம் சண்முகம் கூறியது: 

திருவாரூர்-காரைக்குடி வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஏராளமானவர்கள் பணி நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், கல்வி கற்பதற்காகவும் சென்று இந்த தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆனபோதிலும்   இன்னும் இந்த தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் விடப்படவில்லை. இதனால் இந்த தடத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற நகர மக்கள்  சென்னை செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. 

இத்தடத்தில் மீண்டும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டால் பயணிகள். வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தடம் உள்ள பகுதிகளுக்கு எம்.பிக்களாக உள்ள தஞ்சாவூர் பழனிமாணிக்கம், ராமநாதபுரம் நவாஸ்கனி ஆகியோரிடம் இத்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை உடனே இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்..

நன்றி: தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments