அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக சென்னை எழும்பூர் சோழன் இனைப்பு ரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க கோரி நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசு MP கடிதம்


அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக சென்னை எழும்பூருக்கு சோழன்  ரயிலுக்கு இனைப்பு ரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க கோரி நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் MP கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் MP எழுதிய கடிதத்தில் 

பட்டுக்கோட்டை தாலுக்கா ரயில்வே பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கையை இங்கு நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த அமைப்பு மட்டுமல்ல, அறந்தாங்கி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் சங்கங்களும் இதையே கோருகின்றன. காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை  மற்றும் மயிலாடுதுறை முதல் காரைக்குடி  வரை இதே ரயில் சேவை, சென்னை மற்றும் பிற பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் எளிதில் பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 

எனவே நான் பாராளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தில் இந்த விஷயத்தை எழுப்பி, ஏற்கனவே ரயில்வே வாரியம், தலைவரிடமும் பிரச்சினையை எடுத்துச் சென்று உள்ளேன். 

நீங்கள் பொறுப்பான நபராக இருந்து, குழுத் தலைவரிடம் அனுமதி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நேர்மறையான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments