ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி


ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் சரகம், ஆர். புதுப்பட்டினம் கிராமத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) தலைமை தாங்கினார். ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம், துணை தாசில்தார், மீமிசல் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தீயணைப்புத்துறை, போலீசார், மருத்துவத்துறையினர், மின்சாரத்துறை, குடிநீர் வழங்கல் துறை, உணவு பொருள் வழங்கல் துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வை அறிந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments