புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தமிழகத்தில் 393 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் விவரம் வருமாறு:- 11 ஆசிரியர்கள் தேர்வு  புதுக்கோட்டை மாவட்டத்தில்

* எண்ணை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், 

* காவேரி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட், 

* தாஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராஜகோபால், 

* சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகாரி, 

* ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன், 

* மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, 

* அரிமளம் ஒன்றியம் பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சாத்தப்பன், 

* மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சதீஷ்குமார், 

* அன்னசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பவானி, 

* வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடன ஆசிரியர் குமார், 

ஓரியண்டல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் 

ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments