புதுக்கோட்டையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து கொடுத்தபின் அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலியில் தங்களுக்கு உரிய பாகங்களில் உடனுக்குடன் வாக்காளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தனர். விராலிமலையில் நடைபெற்ற முகாம்களை விராலிமலை தாசில்தார் சதீஷ் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் விவரங்களை குறைவாக பதிவேற்றம் செய்துள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments