ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வ.உ.சி பிறந்தநாள் நாள் விழா மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்.!ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வ.உ.சி பிறந்தநாள் நாள் விழா மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (05-09-2022) வ.உ.சி பிறந்தநாள் மற்றும் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று இருவரின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார். வ.உ.சி மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் நாட்டுக்கு ஆற்றிய தொண்டினையும் எடுத்துரைத்தார். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககத்தால் வெளியிடப்பட்ட செயல்முறைகள் படி இன்றைய தின நிகழ்வான கொரானா தடுப்பூசி அவசியம் பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்வை உதவித் தலைமையாசிரியர் ஸ்டாலின், தாவரவியல் ஆசிரியர் செந்தில்குமார், இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். இந்நிழ்வில் அனைத்து ஆசிரியர் பெருமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments