ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சிமன்ற தலைவர்களுடன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் 146 கிராம ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020-21-ம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக (எஸ்.சி., எஸ்.டி) குக்கிராமங்களில் 5 சதவீதமும், இதர குக்கிராமங்களில் 10 சதவீதமும் பங்களிப்பு தொகையாக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து இல்லங்களுக்கும் முறையான அளவில் குடிநீர் கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்வதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, இத்திட்டத்தின் முழு பயனும் பொதுமக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, உதவி திட்ட அலுவலர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments