புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் வர்த்தக கழக தலைவர் சேவியர், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். முன்னதாக மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் சீனு.சின்னப்பா உருவப்படத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார். கூட்டத்தில் திருச்சி மண்டலத்தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் சவரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கதிரேசன் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் புதுக்கோட்டையின் நீண்ட நாள் கோரிக்கையான திருவப்பூர் ரெயில்வே கேட் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்து அதற்குரிய நிதியையும் ஒதுக்கி ஆவண செய்த எம்.எம்.அப்துல்லா எம்.பி.யை பாராட்டுகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை ஜங்ஷன் என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு தஞ்சை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, புதுக்கோட்டை, பொன்னமராவதி வழியாக மதுரை வரை ஒரு புதிய இருப்பு பாதையை உருவாக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரெயிலின் கோச் பெட்டிகள் எந்தெந்த எண்கள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரியப்படுத்தும் விதத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புதுக்கோட்டையில் பழைய இடத்தில் இயங்கி வந்த அரசு தலைமை பொது மருத்துவமனையை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் ஷேர் ஆட்டோ இயங்க ஆவண செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூடுதல் செயலாளர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் முகம்மது அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.