பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக சென்னை - காரைக்குடி இடையே கம்பன் ரயிலை மீண்டும் இயக்க S. வெங்கடேசன் MP கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக தென்னக இரயில்வே பொது மேலாளர் தகவல்




திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் சென்னை கம்பன் விரைவு ரயில் (16175/16176) மீண்டும் இயக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் MP அவர்கள் விடுத்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தென்னக இரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

நல்ல அறிவிப்பினை விரைவில் எதிர்பார்ப்போம். சு.வெங்கடேசன், எம்பி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.






மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்த போது கம்பன் எக்ஸ்பிரஸ் சென்னை- விழுப்புரம்  - மயிலாடுதுறை -  திருவாரூர் - பட்டுக்கோட்டை- அறந்தாங்கி - காரைக்குடி - இராமேஸ்வரம் சென்று வந்த ரயில் அகலரயில்பாதை வேலைக்காக நிறுத்தப்பட்டது. 

இப்போது அகலப் ரயில் பாதை வேலைகள் முடிந்து திருவாரூர் டு காரைக்குடி ரயில்  , எர்ணாகுளம் டு வேளாங்கண்ணி ரயில், செகந்திராபாத் டு இராமேஸ்வரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

16 வருடங்களுக்கு முன் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இதே வழித்தடத்தில் இயக்க காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார ரயில் நிலையம் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இக்கோரிக்கைக்கு வழு சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கம்பன் எக்ஸ்பிரஸை இயக்க கோரி  ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்ப,ரயில்வே துறையும் பரிசீலிப்பதாக கடிதம் அனுப்பியுள்ளது. 

மாற்று தொகுதி பிரச்சினையையும் புரிந்து கொண்டு முயற்சி எடுத்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு திருவாரூர் டு காரைக்குடி வாழ் ரயில் பாதை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments