உலகில் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்துவரும் அரசரானார் புருணை சுல்தான்




பிரிட்டனின் எலிசபெத் அரசியார் காலமானதை அடுத்து, புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (Hassanal Bolkiah)  உலகில் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்துவரும் அரசராகியுள்ளார்.

1967ஆம் ஆண்டு அரசரான அவர் சுமார் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருவதாக Bernama செய்தி நிறுவனம் கூறியது.

எலிசபெத் அரசியாரின் ஆட்சி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. கடந்த வியாழக்கிழமை அரசியார் காலமானார்.

அவரின் நல்லுடலைத் தாங்கிய பேழை ஸ்காட்லந்தில் உள்ள பால்மோரலிலிருந்து (Balmoral) நகரங்கள், கிராமங்கள் வழி செல்லத் தொடங்கியுள்ளது.

எலிசபெத் அரசியாரின் மகனான மன்னர் சார்ல்ஸ் பிரிட்டனின் புதிய அரசராகியுள்ளார். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments