கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்ட பழைய காலனி (ஊற்று) சாலை! GPM மீடியா செய்தி எதிரொலியாக தெரு விளக்கு எரிய நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகம்!!




கோபாலப்பட்டிணம் பழைய காலனி அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை மற்றும் நடுத்தெருவில் உள்ள தெரு விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரியாத தெரு விளக்கை GPM மீடியா செய்தி எதிரொலியாக நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகம் சரி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு தோப்பு வழியாக செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. கடந்த பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து செல்பவர்கள், அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக குடிநீர் எடுத்து செல்லுக்கூடிய பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லையும், விஷ பாம்பு, விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்தும் செல்கின்றன. இதனால் ஊற்று தண்ணீர் எடுத்து நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். 

பல மாத காலத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கை பற்றி   GPM மீடியாவில் செய்திகள் வெளியிட்டோம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தோம்.  இதனையடுத்து நாட்டானி புரசக்குடி  ஊராட்சி நிர்வாகம்  பல மாத காலத்திற்கு மேலாக எரியாத தெருவிளக்கை சரி செய்து 16.09.2022 அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரியவிடப்பட்டது.

தெருவிளக்கு எரிய  நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகதிற்கு GPM மீடியா மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கின்றோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments