பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஆய்வு
பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஆய்வு செய்தார் 

பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் 22.09.2022 வியாழக்கிழமை மாலை  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்  மணிஷ் அகர்வால்   பாதுகாப்பு மற்றும்  அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார் ,வர்த்தக பிரிவு மேலாளர் , எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர்  கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், துணைச் செயலாளர் மு. கலியபெருமாள் செயற்குழு உறுப்பினர் வே சுப்பிரமணி உறுப்பினர்கள் கோ. சங்கர் , பாலசுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டு  கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை  சமர்ப்பித்தனர்
கோரிக்கை மனுவில் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில் 
சரக்கு போக்குவரத்தை  தொடங்க வேண்டும் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும்,கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில்  பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்  டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் , சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலை  உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

 கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட இரயில்வே மேலாளர்,"சோழன் விரைவு இரயிலுக்கான இணைப்பு இரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் இரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான இரயில் சேவை குறிப்பாக தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை இரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார். 

முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்க்கு இரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments