அறந்தாங்கி வழியாக ‌சென்னை தாம்பரம் - செங்கோட்டை விரைவில் இயக்க கோரி தென்னக இரயில்வே பொது மேலாளர் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA வலியுறுத்தல்அறந்தாங்கி வழியாக ‌சென்னை தாம்பரம் - செங்கோட்டை விரைவில் இயக்க கோரி தென்னக இரயில்வே பொது மேலாளர் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST ராமச்சந்திரன் MLA வலியுறுத்தினார்

இன்று (23.09.22) தென்னக (Southern Railway) ரெயில்வேயின் பொது மேலாளர் திரு.பி.கோ. மால்யா அவர்களை நேரில் சந்தித்து சென்னை தாம்பரம் - செங்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் ரெயிலை; விரைவில் இயக்கப்பட வேண்டும் என்றும் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு தேவையான கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA வலியுறுத்தினார்.


அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
வணக்கம், எனது தொகுதி அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் ரெயில்கள் இயக்கம் துவங்கப்பட்டுவிட்டது. ஆனால் போதிய கேட் கீப்பர்கள் இல்லாமல் உள்ளனர். எனவே போதுமான கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ரெயிலலேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து ரெயில்வே கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைலேற்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் ரெயிலை விரைவில் இயக்கப்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments