அமரடக்கி வெளியாத்தூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 
27/09/2022
ஆவுடையார்கோவில், செப்.27-

ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கி வெளியாத்தூர் கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் கிளைக் கழகம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமரடக்கி பகுதியில் இயங்கி வந்த மினி கிளினிக் மூடிவிட்டதால் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைக்க இந்த ஊர் கடைவீதியில் மழைக்காலங்களில் மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் அமைத்து விட வேண்டும். இந்த பகுதியில் உள்ள பழைய மின்மாற்றியை மாற்றி புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஒக்கூர் சாலையிலிருந்து பிரியும் சவுந்தரனாகிய புரம் மேட்டு கொல்லை சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட குழு சுப்பிரமணியன், முருகேஷ், எம்.எஸ்.கலந்தர், வீரய்யா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments