பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்போலீஸ் அனுமதி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு தகவல்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போலீஸ் அனுமதி சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் சில நேரங்களில் இந்த சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதால், பாஸ்போர்ட்டு பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமே போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நடைமுறை நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ேபாலீஸ் அனுமதி சான்றிதழுக்கான தேவையின் திடீர் அதிகரிப்பை நிவர்த்தி செய்யும் வகையில், செப்டம்பர் 28-ந்தேதி (நாளை) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட்டு சேவை மையங்களில் போலீஸ் அனுமதி சான்றிதழ் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சேர்க்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது.

இது வெளிநாட்டில் வேலை தேடும் இந்திய குடிமக்களுக்கு உதவுவதுடன், கல்வி, நீண்ட கால விசா, குடியேற்றம் போன்ற பிற தேவைகளுக்கான போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments