ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு கள பயணம்



காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில்  26-09-2022  பார்வையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணிதப் பிரிவு மாணவர்கள் களப் பயணமாக சிக்ரி சென்று பார்வையிட்டனர். மின்கலம் தயாரிப்பு, கண்ணாடி குடுவைகள் தயாரிப்பு போன்றவற்றை பேராசிரியர்கள் விளக்கி காட்டினர்.அதனை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். களப்பயணத்தை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் துவக்கிவைத்தார். நிகழ்வின் வழிகாட்டி ஆசிரியர்களாக  பள்ளி வேதியியல் ஆசிரியை பத்மாவதி தாவரவியல் ஆசிரியர் செந்தில்குமார், இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து வழிநடத்தி சிறப்பித்தனர். இக்களப்பயணம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கும், அறிவியில் ஆராய்ச்சி சார்ந்த சரியான புரிதலையும், ஏற்படுத்படுத்தியதாக மாணவர்கள் கூறினர்.  மாணவர்களுக்கு மதிய உணவை இயற்பியல் ஆசிரியரும் தாவரவியல் ஆசிரியரும் வழங்கி சிறப்பித்தார்கள்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments