பாரத் கவுரவ் திட்டத்தில் தமிழகத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா கூறினார்.




ரெயில் என்ஜின்

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் லோகோ என்ஜின் மற்றும் ரெயில் வேகனை போக்குவரத்து சேவைக்காகவும், சிறப்பு வாய்ந்த ஊட்டி மலை ரெயில் நீராவி என்ஜினையும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொன்மலை பணிமனையில் உள்ள டீசல் இன்ஜின் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களை பாராட்டி கவுரவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;-

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றது‌. இந்த பணிமனையில் உருவாக்கப்பட்ட முதல் அதிவேக டீசல் என்ஜின் நீலகிரி மலைப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சி. இதை உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதல் ரெயில்கள்

வந்தே பாரத் திட்டம் தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். நடப்பு நிதியாண்டில் சில ரேக்ஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரெயில்கள் இயங்குகின்றன. மேலும் கூடுதலாக ஒரு ரெயில் இந்த மாதம் மற்றும் நவம்பர் மாதத்திலும், 3 ரெயில்கள் அக்டோபர் மாதத்திலும் இயக்கப்படும். பாரத் கவுரவ் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயில் பாரத் கவுரவ் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் ஷ்யாம்தர் ராம், முதன்மை தலைமை எந்திர பொறியாளர் கவுதம் துத்தா மற்றும் பணிமனை அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments