போக்சோ வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 21 பேர் குற்றவாளிகள்! - நீதிபதி அதிரடி தீர்ப்பு

போக்சோ வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 21 பேர் குற்றவாளிகள்! - நீதிபதி அதிரடி தீர்ப்பு

சென்னை, வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக எண்ணூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உட்பட 26 பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரனின் நண்பரான இன்ஸ்பெக்டர் புகழேந்திமீதும் சிறுமி குற்றம்சாட்டியதை அடுத்து புகழேந்தியும் கைதுசெய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேரில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டார். அதனால் மீதமுள்ள 21 நபர்கள்மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், ஷகிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண்உள்ளிட்ட 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் செப்டம்பர் 19-ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறினார். போக்சோ வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தகவல் காவல்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments