புதுக்கோட்டை மாவட்ட 8-ஆம் வகுப்பு தனித் தோ்வா்கள் செப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்... அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ.பிச்சைமுத்து தகவல்!எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் வரும் செப்டம்பா் 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ.பிச்சைமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அக்டோபா் 2022 இல் நடைபெறவுள்ள தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு 12 1/2 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூா் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணம் ரூ. 175-ஐ பணமாக சேவை மையங்களில் செலுத்த வேண்டும்.

செப்டம்பா் 10-க்குள் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் 12, 13 தேதிகளில் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 500 கூடுதலாகச் செலுத்தி பதிவு கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எழுதி தோல்வியடைந்த பாடத்தை தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள், தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களை இணைக்க வேண்டும்.

தனித்தோ்வா்கள் ரூ. 42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய, அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அக்டோபா் 10 ஆம் தேதி - தமிழ்,11ஆம் தேதி - ஆங்கிலம், 12 ஆம் தேதி - கணிதம்,13 ஆம் தேதி -அறிவியல்,14 ஆம் தேதி - சமூக அறிவியல் என தினமும் காலை 10 முதல் 12 மணி வரை தோ்வுகள் தொடா்ந்து நடைபெறும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments