கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேக கூட்டங்கள்!



கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதியை கருமேகங்கள் கூட்டம் சூழ்ந்தது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இன்று செப்டம்பர் 06 செவ்வாய்க்கிழமை  
மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments