கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
புதுகை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தலைமை வகிக்க, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஆ.ராஜாராமன் முன்னிலை வகிக்க, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments