மீமிசல் அருகே அரசநகரிபட்டினத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே சேமங்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பூரண புஷ்ப கலை ஸ்ரீராக்காச்சி அம்மன் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று (7/9/2021) நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக கோவிலுக்கு சீர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சேமங்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பூரண புஷ்ப கலை ஸ்ரீராக்காச்சி அம்மன் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதே ஊரில் அரசநகரிபட்டினம் கிராமத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள், ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளிவாசலில் இருந்து கோவிலுக்கு வான வேடிக்கையுடன் நடந்து சீர் கொண்டு சென்றனர். இன்று நடைபெற உள்ள கும்பாபிஷே நிகழ்வுக்கு சுமார் 15000 பேருக்கு அன்னதானத்திற்கு 50 மூட்டை அரிசி அரசநகரிபட்டினம் ஜமாத்தார்கள் கொடுத்து சிறப்பித்தனர்.மேலும் இளைஞர்கள் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவாயில் ஜமாத் என்ற பேனர்களும் வைத்திருப்பது காண்போர்களை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments