அம்மாபட்டினம் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

அம்மாபட்டினம் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பள்ளிமேலான்மைக்  குழு கூட்டம்  புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்  விரிவுரையாளர் திரு.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மணமேல்குடி வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சுந்தராசு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி, கல்வியாளர் முகமது ஜலில் மற்றும் உறுப்பினர்கள் குறிஞ்சி நைனா முகமது, ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
#இடைநிற்றலைத் தவிர்த்தல்.
# பள்ளிக் கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் பள்ளிசசுற்றுச்சுவர் பழுது பார்த்தல்.
# பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவண்ணம் மண் நிரப்புதல்.
#தமிழ் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமனம் செய்தல்.
#அருகில் உள்ள குளம் தூய்மை செய்தல்.

இக்கூட்டத்தின் முடிவில் ஆசிரியர் 
J.L.A.ஆரோக்கியம் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments