விவசாயம் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை
உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் வாட்ஸ்-அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள், வினாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 18004251907 என்ற இலவச கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இச்சேவையானது, விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உழவர்சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னணு தேசிய வேளாண் சந்தை, முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு, சிறப்பு வணிக வளாகங்கள் தொடர்பான கேள்விகள், புகார்கள் ஆகியவற்றை 7200818155 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி தகவல் பெற்று பயனடையலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments