35-வது ஆண்டை தொடங்கியுள்ள பாம்பன் பாலத்தின் சிறப்புகள்ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் கடல் நடுவே அமைந்துள்ள அழகிய பாலமாகும்.
அதனை ஒட்டி அமைந்த பாலத்துக்கும் இதேபோன்ற முக்கியத்துவம் உள்ளது.

பாம்பன் பாலத்தின் கட்டுமான பணி கடந்த 1973ஆம் ஆண்டு ரூ.20 கோடி ரூபாய் நிதியில் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த பணிகள் 1988ஆம் ஆண்டு முடிவடைந்தன. கடலுக்குள் 79 தூண்களை அமைத்து கட்டப்பட்ட இந்த பாலத்தை அக்டோபர் மாதம் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார்.

இந்த பாலத்தின் மைய பகுதி, ஸ்ப்ரிங் பேரிங் இணைப்புகளால் கட்டப்பட்டுள்ளது. அதுபோல் தினமும் பாம்பன் பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் ராமேஸ்வரம் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ள பாலத்தை சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.ஆசியாவில் கடலுக்குள் அமைந்துள்ள மிக நீளமான பாலங்களில் பாம்பன் பாலமும் ஒன்றாகும். இந்த பாலம் தனது சேவையை தொடங்கி, 34 ஆண்டுகளை கடந்து தற்போது 35ஆவது ஆண்டை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாம்பன் பாலம் 16 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகள் கடந்த 8 மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாம்பன் பாலத்துக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, புதிய நிறத்தில் ஜொலிக்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments