கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த முகம்மது நௌபில் என்ற இளைஞருக்கு மருத்துவ நிதி வழங்கிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!!!




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் வசித்து வரும் காதர் பாட்ஷா  அவர்களின் மகன் முகம்மது நௌபில் 08.07.2022 அன்று ஏற்பட்ட வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக பொருளாதார உதவி வேண்டி GPM மீடியாவில் கடந்த 09-07-2022 அன்று பதிவிட்டிருந்தோம். 
அந்த பதிவானது 
அதனடிப்படையில் சிகிச்சைக்கான பொருளாதார உதவியாக ரூ.80,000 கிடைத்தது.

மேலும் கிடைக்கபெற்ற பணமானது கரூர் வைசியா வங்கி கணக்கிற்கு ரூ.30,000-யும், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் மூலமாக முதல் தவணையாக ரூ.20,000-யும் இரண்டாம் தவணையாக ரூ.30,000-வும் மொத்தம் ரூ.50,000-யும், ஆகமொத்தம் ரூ.80,000 கிடைத்தது.

கிடைக்கபெற்ற பணத்தை முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவரின் அண்ணனிடம் 15.07.2022 அன்று ரூ.30,000 ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தாயாரிடம் 24.07.2022 தேதி அன்று ரூ.20,000-யும், அவருடைய அண்ணன் வங்கி கணக்கிற்கு ரூ.30,000 அனுப்பிவைக்கப்பட்டது.


பணம் அனுப்பி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌, செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற வாசகர்களுக்கு இறைவன் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் மற்றும் தகவலை பகிர்ந்த அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 08.07.2022 முதல் சுமார் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தற்பொழுது மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். மேலும் வாய் பேச முடியாமலும், தானாக எழுந்து உட்கார முடியாத நிலையில் உள்ளார். இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் அனைத்து உறுப்புகளும் சரியாக உள்ளது எனவே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என தெரிவித்துள்ளார். ஆகவே பூரண குணமடைய அனைவரும் பிராத்திப்போம்!!

வேலைப்பளு காரணமாக கணக்கு வரவு, செலவுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டதிற்கு GPM மீடியா வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றோம். 

தொடர்ந்து GPM மீடியா மீது நம்பிக்கை வைத்து உதவி செய்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுக்கு செல்வத்தை‌ இறைவன் அதிகமாக வழங்க தூஆ செய்கின்றோம்.

பொறுப்புடன். ..                                      
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
05-10-2022
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments