புதுக்கோட்டையை சேர்ந்த பெண்மணி ரஹ்மத் நிஷா கிடைத்துவிட்டார்.!!புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சிராஜ் நகரை சேர்ந்த ரஹ்மத் நிஷா என்ற பெண்மணியை கடந்த 29.09.2022 அன்று முதல் காணவில்லை எனவும், இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு கடந்த 03.10.2022 திங்கட்கிழமை அன்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

திருநெல்வேலி மாவட்டம் ஆற்றங்கரை தர்காவில் தங்கி இருந்த நிலையில் அங்கு இருந்தவர்கள் தாங்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதால் வீட்டிற்கு செல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவருடைய பையில் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் தொலைபேசி எண் இருக்க அருகில் இருந்தவர்கள் உடனடியாக புதுக்கோட்டையில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் உடனடியாக உறவினர்கள் ஆற்றங்கரை தர்காவிற்கு கிளம்பி சென்று ரஹ்மத் நிஷாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக உறவினர் தகவல் அளித்ததின் பேரில் இதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை பதிவு செய்த GPM மீடியாவிற்கும், இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும்,  நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
 
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.!!!


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments