வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் வெளியாகியுள்ள தகவல்களிபடி, "வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு செல்ல வேண்டும். சில பேர் சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்கையில், அங்கு ஆடு மேய்த்தல், ஒட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கானவே மத்திய அரசின் நிறுவனம் இருக்கிறது. அதன் மூலமாகவும் வேலைக்கு செல்லலாம்.
வேலை விசா வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு செல்வது நல்லது. தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கு இதுபோன்று சுற்றுலா விசாவை பெற்றுக் கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் ஏமாந்து விடுகிறார்கள்.
எப்போதும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக தலங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து வேலைக்கு செல்லக்கூடாது. இதற்கென்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பாக தொலைபேசி எண். இருக்கிறது அதில் சந்தேகங்களை கேட்டுக் கொண்டு வெளிநாடு செல்வது சிறப்பு” என்றுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.