ஓவியம் வரைவதில் சாதனை படைத்த அம்மாபட்டிணத்தை சேர்ந்த இளம்பெண்!!!



அம்மாபட்டிணத்தை சேர்ந்த இளம்பெண் ஓவியம் வரைவதில் சாதனை படைத்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியின் மகளும், சதாம் உசேனின் மனைவியுமான சிபானா பஸ்லீம் (வயது 23). இவர், இளம் வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக உள்ளார். 
இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு, பெண்களுக்கான விழிப்புணர்வு, சுதந்திர தினம், குடியரசு தினம், சுதந்திர போராட்ட வீரர்கள், இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவை வரைந்துள்ளார். 

இவரது ஓவியங்களை பார்வையிட்டு அவரை பாராட்டி ஒரு தனிநபர் பல்வேறு கலைகளில் மாஸ்டராக விளங்ககூடிய பிரிவில் சாதனையாளராக 'விரிஷா புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பின் புத்தகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments