அறந்தாங்கி அருகே 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது!அறந்தாங்கி அருகே 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் நேற்று அறந்தாங்கி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை நடத்தினர். 

சோதனையில், மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்த ஹயிதர்அலி (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 18 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments