தாய்லாந்தில் சிக்கியுள்ள கணவரை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் அவரது மனைவி கோரிக்கை மனுவை அளித்துள்ளாா்.




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், செய்யானம் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. செல்வகுமாரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி ரம்யா, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தாய்லாந்துக்கு போவதற்கு ரூ. 1.30 லட்சம் காரைக்குடி முகவா் மூலம் கொடுத்துவிட்டுத்தான் கடந்த ஆண்டு தாய்லாந்து சென்றாா். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில் அவரை அடைத்து வைத்து கடந்த மே மாதம் ரூ. 3.58 லட்சம் பணம் கேட்டு மா்மநபா்கள் மிரட்டியுள்ளனா். நானும் நகைகளை விற்று அந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு, எனது கணவா் செல்வகுமாா் உள்ளிட்டோரை அறியாத ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனா். அங்கிருந்து அவா்கள் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரதத்தை அடைந்துள்ளனா்.

அண்மையில் ஏராளமானோா் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டபோது, எனது கணவரும் வந்துவிடுவாா் என நம்பியிருந்தேன். ஆனால், அவா் வரவில்லை. இது மேலும் அச்சத்தை மூட்டுகிறது. எனவே, எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments