மது அருந்திவிட்டு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை ..." - அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்




ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திவிட்டு பணிபுரிவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மது அருந்திய நிலையில் பணிபுரிவது பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதுடன் பயணுக்களுக்கு கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதால் தமது கழகப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
எனவே, மது அருந்திய நிலையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அடிப்படை சம்பளக்குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments