ராமேசுவரம் - மதுரை இடையே அக்.10 முதல் கூடுதலாக வாரம் மும்முறை (Tri Weekly) சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

            ராமேசுவரம் - மதுரை இடையே அக்.10 ஆம் தேதி முதல், கூடுதலாக ஒரு வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை அக்டோபா் 10 ஆம் தேதி முதல் தொடங்கி, மறுஅறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். ராமேசுவரம் - மதுரை வாரம் மும்முறை சிறப்புக் கட்டண ரயில் (06780) ராமேசுவரத்திலிருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் அட்டவணை நேரம் (திங்கள் செவ்வாய் , வெள்ளி)
 
இராமேஸ்வரம் - காலை 06.20 மணிக்கு புறப்பாடு

இராமநாதபுரம் -  காலை 07.28 / 07.30

பரமக்குடி - காலை 07.53 / 07.55

மானாமதுரை சந்திப்பு - காலை 08.38 / 08.40

மதுரை சந்திப்பு - காலை 10.00 மணிக்கு வருகை 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments